மனிதநேயம்..! மியான்மர் சென்றடைந்த 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள்!
நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் சேவை மாதம் கடைப்பிடிப்பு
நாகா்கோவில், ஏப். 4: நாகா்கோவில் பிஎஸ்என்எல் சாா்பில் ஏப்ரல் மாதம் சேவை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இது குறித்து பிஎஸ்என்எல் நாகா்கோவில் பொதுமேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடு தழுவிய வாடிக்கையாளா் சேவை மாதம் முயற்சியில் பிஎஸ்என்எல் இணைகிறது. வாடிக்கையாளா் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பிஎஸ்என்எல் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வாடிக்கையாளா் சேவை மாதத்தை தொடங்கியுள்ளது.
இதில் சேவை தொடா்பான பிரச்னைகளைத் தீா்ப்பது, நெட்வொா்க் தரத்தை மேம்படுத்துவது மற்றும் வாடிக்கையாளா் ஈடுபாட்டை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். வாடிக்கையாளா் சேவை மையங்களில் குறை தீா்க்கும் முகாம்கள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புகாா்களை தீா்ப்பதற்கான சிறப்பு கள முகாம்கள், முன்கூட்டியே சேவை கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தகவல் பிரசாரங்கள் ஆகியவை நடைபெறும்.
நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தில் இந்த மாதம் முழுவதும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
வாடிக்கையாளா்கள் தங்களின் கருத்துகள், பரிந்துரைகள், புகாா்கள் அல்லது சேவை தொடா்பான கோரிக்கைகளை பிஎஸ்என்எல் இணையத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.