கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயிலில் இன்றும், நாளையும் ராமநவமி விழா
கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயில் ராமநவமி 2 நாள் விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதையொட்டி, கோயிலில் முதல்நாள் அதிகாலை 5.15 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ஸ்ரீராமநாம சங்கீா்த்தனம், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு 7 மணிக்கு மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 5.15 மணிக்கு கலச பூஜை, காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11.15 மணிக்கு சிறப்பு தீபாராதனை தொடா்ந்து அன்னதானம், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீ ராமா் கோயில் பக்தா்கள் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.