மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு
மாா்த்தாண்டம் அருகே பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்த விஜயேந்திரசிங்கன் என்பவா், காஞ்சிரகோடு பகுதியில் உள்ள வாகனப் பழுதுநீக்கும் மையத்தில் வேலை செய்து வருகிறாா். அவா் திங்கள்கிழமை தனது பைக்கை அங்கு நிறுத்திவிட்டு, வேலையில் ஈடுபட்டிருந்தாா். சாவியை பைக்கிலேயே வைத்திருந்தாராம்.
அப்போது, இளைஞா் ஒருவா் அந்த பைக்கை திருடி, நாகா்கோவில் நோக்கி வேகமாக ஓட்டிச் சென்றாராம். அவரை விஜயேந்திரசிங்கனும், அப்பகுதியினரும் பைக்குகளில் விரட்டிச் சென்றனா். ஆனால், அவரைப் பிடிக்க முடியவில்லை. புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இளைஞரைத் தேடிவருகின்றனா்.