சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
மிசோரமில் பைராபி-சாய்ராங் ரயில் பாதையை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பதாக முதல்வர் லால்துஹோமா தெரிவித்தார்.
சாய்ராங் தலைநகருக்கு அருகில் அமைந்திருப்பதால், இந்த ரயில் பாதை ஐஸ்வாலை ரயில்வே வரைபடத்தில் சேர்க்கும். ஐஸ்வாலில் நடந்த மிசோரம் காவல் சேவை சங்கத்தின் மாநாட்டில் லால்துஹோமா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
செப்டம்பர் 12 ஆம் தேதி பிரதமர் மாநில தலைநகருக்கு வந்து இரவு தங்குவார். மறுநாள் புதிய ரயில் பாதையை அவர் திறந்து வைப்பார். பிரதமரின் வருகை தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கலந்துரையாடியதாக முதல்வர் லால்துஹோமா கூறினார்.
சாய்ராங் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த வசதியாக மேம்படுத்தப்படும், மேலும் ராஜதானி ரயில் சேவைகள் இயக்கப்படும். 51.38 கி.மீ நீளமுள்ள இந்த ரயில் பாதை திட்டம், வடகிழக்கு முழுவதும் இணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
புதிய ரயில் பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும், மிசோரத்தை நாட்டின் ரயில்வே வரைபடத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கும். இந்தப் பாதையில் 12.8 கி.மீ நீளமுள்ள 48 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள் மற்றும் 87 சிறிய பாலங்கள் இருப்பதாகக் கட்டுமான பொறியாளர்கள் கூறுகின்றனர். பாலம் எண் 196, குதுப்மினாரை விட 104 மீட்டர் உயரமாக இருப்பதாக அவர் கூறினார்.