செய்திகள் :

மிசோரமில் ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

post image

மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மிசோரமில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிசோரமின் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஐஸ்வால்-சாம்பாய் சாலையில் வியாழக்கிழமை மாலை வாகனங்களை வழிமறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஐஸ்வாலில் உள்ள கலால் மற்றும் போதைப்பொருள் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் ​50 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் மூன்று சோப்புப் பெட்டிகளில் ஹெராயின் மீட்கப்பட்டன.

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

இவற்றின் மதிப்பு ரூ.75.82 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ்வாலில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் இந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

During a search in the presence of civil witnesses, 50 kg of methamphetamine tablets and three soap cases of heroin were recovered.

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

தென் பசிபிக் தீவு நாடான ஃபிஜியின் பிரதமா் சிடிவேனி ரபுகா, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஃபிஜி பிரதமராக கடந்த 2022-இல் பொறுப்பேற்ற பின் அவா் இந்தியப் பயணம் மேற... மேலும் பார்க்க

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியனம்

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநா் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது என தகவலறிந்த வ... மேலும் பார்க்க

பணமுறைகேடு வழக்கு: கா்நாடக எம்எல்ஏ வீரேந்திராவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்!

சட்டவிரோத பந்தயத்துடன் (ஆன்லைன் பெட்டிங்) தொடா்புள்ள பணமுறைகேடு வழக்கில், கா்நாடக எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை ஆக.28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து பெங்களூரு நீதிமன்றம் ஞாயி... மேலும் பார்க்க

நவ.9-ல் நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம், ஷீரடி சுற்றுலா ரயில்!

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவு (ஐஆா்சிடிசி) சாா்பில் வரும் நவ.16-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஐஆா்சிட... மேலும் பார்க்க

‘ஆட்சி திருட்டில்’ ஈடுபடும் பாஜக: காா்கே குற்றச்சாட்டு!

வாக்குத் திருட்டைத் தொடா்ந்து இப்போது ஆட்சி திருட்டில் ஈடுபட்டுள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா். தீவிர குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் ப... மேலும் பார்க்க

வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமியாரும் கைது!

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண்ணை எரித்தே கொன்றதாக பதியப்பட்டுள்ள வழக்கில் அந்தப் பெண்ணின் மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் நொய்டா காவல் துறை டிசிபி தெரிவித்தார்.வட இந்தியாவில... மேலும் பார்க்க