செய்திகள் :

மிடில் ஏஜ் தம்பதியரின் பெட்ரூம் பிரச்னை இது! | காமத்துக்கு மரியாதை - 242

post image

திருமணமாகி பத்து, பதினைந்து வருடங்கள் ஆன தம்பதிகளில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் வருகிற பிரச்னையைப்பற்றிதான் இந்தக் கட்டுரையில் பேசவிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

தாம்பத்தியம்
தாம்பத்தியம்

''அந்த நபர் நாற்பதுகளின் மத்தியில் இருப்பார். பலமுறை எங்கள் மருத்துவமனை வரை வந்துவிட்டு, உள்ளே வர சங்கடப்பட்டுக்கொண்டு சென்று விடுவாராம். என் அனுபவத்தில் இப்படிப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறேன்.

உங்கள் காய்ச்சல் சரியாக அதற்கான மருத்துவரைப் பார்ப்பதுபோலதான், பாலியல் பிரச்னைகளுக்கு ஒரு பாலியல் மருத்துவரை சந்திப்பதும்.

விஷயத்துக்கு வருகிறேன். நன்றாக சென்றுகொண்டிருந்த தாம்பத்திய வாழ்க்கை சில வருடங்களாக கொஞ்சம்கூட மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் அவருடைய பிரச்னை.

விசாரித்ததில், அவருடைய இரண்டு மகள்களும் டீன் ஏஜில் இருக்கிறார்கள். அவருடைய மனைவி, மகள்களுடன் உறங்க ஆரம்பித்திருக்கிறார். இவர் ஹாலில்.

மகள்கள் குழந்தைகளாக இருந்தவரை, கணவன் - மனைவி இருவருமே வாரத்தில் பல நாள்கள் தாம்பத்திய உறவு கொண்டிருக்கிறார்கள்.

நான், பல கட்டுரைகளில் குறிப்பிடுவதுபோல இது மிக நல்ல விஷயம். ஒரு தாம்பத்திய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், மகள்கள் வளர்ந்தபிறகு அவருடைய மனைவி, 'பிள்ளைங்க திடீர்னு முழிச்சிக்கிட்டா அசிங்கமாகிடும்; பிள்ளைங்க கதவை திறந்துட்டு திடீர்னு வெளியே வந்துட்டா; அதுங்க கண்ல ஏதாவது தப்பா பட்டுட்டா வழி மாறிப் போயிடுங்க' என்று பயப்பட ஆரம்பித்திருக்கிறார்.

உறவையும் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். விளைவு, கணவனும் மனைவியும் மாதக்கணக்கில் உறவுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். அதுதான் இப்போது கணவன் - மனைவிக்குள் பிரச்னையாக எழ ஆரம்பித்திருக்கிறது.

Couple (Representational Image)
ஒரு பெட்ரூமில், கணவன் - மனைவியைத் தவிர, ஒரு வளர்ந்த குழந்தை இருந்தாலும் அதை கூட்டம் என்றே சொல்வேன் நான்.

ஒருகட்டத்தில், மனைவிக்கு உடலில் ஏதோ பிரச்னை; அவளுக்கு செக்ஸில் விருப்பமில்லாமல் போய்விட்டது; தன்னை வெறுக்கிறாள்; அதனால்தான், மகள்களின் மேல் பழியைப் போட்டு தன்னைத் தவிர்க்கிறாள் என நினைக்க ஆரம்பித்திருக்கிறார். கூடவே, தான் பல மாதங்கள் உறவே இல்லாமல் இருப்பதால், தன்னுடைய ஆண்மைக் குறைந்துக்கொண்டிருக்கிறது என்றும் நம்ப ஆரம்பித்திருக்கிறார். அதனால்தான் என்னை சந்திக்க வந்திருந்தார்.

பரிசோதனை செய்துபார்த்ததில், அவர் நினைத்துக்கொண்டிருந்ததுபோல அவருக்கு பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை, வயதுக்குரிய சின்னச்சின்ன பலவீனங்களைத் தவிர்த்து.

டாக்டர் காமராஜ்

அதற்கான சிகிச்சைகளை மட்டும் அளித்துவிட்டு, உடனடியாக, இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டுக்கு மாறுங்கள். உங்களுடைய பிரச்னை தீர்ந்துவிடும் என்று கவுன்சிலிங் கொடுத்து அனுப்பிவிட்டேன்.

ஒரு பெட்ரூமில், கணவன் - மனைவியைத் தவிர, ஒரு வளர்ந்த குழந்தை இருந்தாலும் அதை கூட்டம் என்றே சொல்வேன் நான். பிள்ளைகள் வளர்ந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியறையில் உறங்க ஆரம்பியுங்கள். அதுதான், உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

`குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடலில் இருக்கிறீர்களா?' காமத்துக்கு மரியாதை - 241

திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாத தம்பதிகள், பெரும் பதற்றத்துக்குள் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் நிலைமை புரிகிறது. என்றாலும், அவர்களுடைய பதற்றமும், பிரச்னையை அதிகப்படுத்தலாம் என்கிறார் செ... மேலும் பார்க்க

தாம்பத்ய வாழ்க்கை Vs இணையம்: டிஜிட்டல் உலகத்தின் பாதிப்பு எதுவரை உள்ளது, தீர்வுகள் என்ன?

இன்றைய காலகட்டத்தில் இல்லற வாழ்வில், தங்கள் இணையுடன் நேரம் செலவிடும் நபர்களின் எண்ணிக்கையைவிட இணையத்தில் மூழ்கிக் கிடப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். மேலும் தற்போது இந்த இணைய உலகம் 'படிக்கும்' அறையைத... மேலும் பார்க்க

இதயத்தில் பிரச்னை இருப்பவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்? | காமத்துக்கு மரியாதை - 240

’’ ‘டாக்டர் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு. இப்போ நான் நல்லா தான் இருக்கேன். ஆனா, இனிமே நான் தாம்பத்திய உறவே வெச்சுக்க முடியாதா’ என்றவருக்கு, 50 வயதுக்குள்தான் இருக்கும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த ச... மேலும் பார்க்க

அடிக்கடி சுய இன்பம்; விந்தணுக்கள் தீர்ந்து விடுமா? மருத்துவர் விளக்கம்! | காமத்துக்கு மரியாதை-239

'டாக்டர், நான் ரொம்ப வருஷமா சுய இன்பம் செஞ்சுக்கிட்டே இருக்கேன். இப்போ எனக்கு வயசு 35 ஆகிடுச்சு. கல்யாணம் நிச்சயமாகியிருக்கு. ஸ்பெர்ம் எல்லாம் தீர்ந்துப் போயிட்டிருக்குமா டாக்டர்?''டாக்டர், கல்யாணத்து... மேலும் பார்க்க