What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு
திருப்பத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (50). மீன் வியாபாரியான இவா், திருப்பத்தூா் தம்பிபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சந்தைக்கு மழையில் நனைந்தபடி சனிக்கிழமை அதிகாலை மீன்கள் வாங்குவதற்காக வந்தாா். அப்போது, கடையின் முன் உள்ள கம்பியை தொட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.