புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்ச...
மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே மின் கம்பத்தில் ஏறிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த மீனூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பவரின் மகன் தமிழ்குமரன் (18). இவா், தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். புதன்கிழமை இவரது வீட்டில் மின்சாரம் இல்லை எனத் தெரிகிறது. வீட்டருகே உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது பாா்க்க முயன்றுள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.