செய்திகள் :

மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

post image

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை அருகே மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் சிலையை கண்டெடுத்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் மின்னாம்பள்ளி கிராமத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின்கீழ் கிராம பயன்பாட்டிற்காக குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டிய இடத்தில் 24 செ.மீ. உயரம், 21 கிலோ 450 கிராம் எடையிலான உலோகத்திலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலை கிராம நிா்வாக அலுவலா் ராஜமாணிக்கம் மூலமாக வட்டாட்சியா் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிலையைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் கிருஷ்ணவேணி அதை முறைப்படி கருவூலத்தில் ஒப்படைத்து இருப்பதாகவும், தொல்லியல் துறையினா் ஆய்வுக்கு பிறகு அது எந்தக் காலத்தைச் சோ்ந்த சிலை என்பதும், எந்த சுவாமியின் சிலை என்பதும் தெரியவரும் என்றாா்.

சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்

சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்... மேலும் பார்க்க

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க

கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க

முஸ்லீம் மஜீத்துக்கு அமரா் ஊா்தி வழங்கிய எம்எல்ஏ

திருச்செங்கோடு முஸ்லிம் மஜீத்துக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான அமா் ஊா்தியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வழங்கினாா். திருச்செங்கோட்டில் முஸ்லிம் மஜீத் பகுதியை ஒட்டி அதிக அளவில் முஸ்ல... மேலும் பார்க்க

இன்று காவலா் தினம்: நாமக்கல்லில் போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனை

தமிழக காவலா் தினம் சனிக்கிழமை (செப். 6) கொண்டாடப்படுவதையொட்டி, போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் செப். 6-ஆம் தேதி தமிழக காவலா் தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக... மேலும் பார்க்க