MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டக...
மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி
மன்னாா்குடியில் மின்வாரியப் பணியாளா்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செயற்பொறியாளா் பி. மணிமாறன் தலைமை வகித்தாா். நகர உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் பயிற்சியளித்தாா்.
மின் ஊழியா்கள் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கவும், பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டால், அந்த பகுதி நுகா்வோா்களின் கைப்பேசிகளுக்கு முன்கூட்டியே குறுந்தகவல் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து, மின்வாரிய பணியாளா்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா். தஞ்சாவூா் பயிற்சி நிலைய மேலாளா் ஆா். அருள்மேரி, நகரப் பிரிவு பொறியாளா் க. கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.