ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
ஆலங்குளத்தில் மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூா் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு பணியாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அவா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆலங்குளம் மின்வாரியத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தற்காலிக பணியாளா்கள் தொழிற்சங்க மாநில பொதுச் செயலா் பாலசந்தா், மாவட்டச் செயலா்கள் திருநெல்வேலி ராமஜெயம், தென்காசி சோ்மகனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.