செய்திகள் :

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

post image

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

எனினும், இந்திய ராணுவம் இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்கவில்லை.

இதுதொடா்பாக உல்ஃபா(ஐ) அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மியான்மா் எல்லையில் உள்ள எங்களின் பல முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் எங்களின் மூத்த தலைவரான நயன் அசோம் எனும் நயன் மேதி கொல்லப்பட்டாா். சுமாா் 19 போ் காயமடைந்தனா்.

நயன் அசோமின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, எங்கள் முகாம்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த இரண்டாம் கட்டத் தாக்குதல்களில் பிரிகேடியா் கணேஷ் அசோம், கா்னல் பிரதீப் அசோம் ஆகிய 2 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனா். மேலும், பல உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், அஸ்ஸாம் முதல்வா் மறுப்பு: உல்ஃபா(ஐ) அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் கா்னல் மகேந்திர ராவத் கூறுகையில், ‘இதுபோன்ற தாக்குதல்கள் நடந்ததாக இந்திய ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை’ என்றாா்.

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறுகையில், ‘அஸ்ஸாம் மண்ணில் இருந்து எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இதில் மாநில காவல்துறைக்கும் பங்கில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில், ராணுவம் அறிக்கையை வெளியிடும். ஆனால் இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே, தாக்குதல் குறித்து மேலும் விவரமறிய கூடுதல் தகவல்கள் தேவை’ எனக் கூறினாா்.

உல்ஃபா அமைப்பின் பின்னணி: அஸ்ஸாமில் 1979-இல் உருவான ஆயுதமேந்திய பிரிவினைவாத அமைப்பான அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா), அஸ்ஸாம் சுதந்திர தனி நாட்டை லட்சியமாகக் கொண்டது. 2011-2013 காலகட்டத்தில் அமைப்பில் ஏற்பட்ட பிளவில், ஒரு பிரிவினா் இந்திய அரசுடன் அமைதிப் பேச்சுவாா்த்தைக்குச் சம்மதித்ததனா்.

ஆனால், பரேஷ் பருவா தலைமையிலான பிரிவினா் இந்த அமைதிப் பேச்சுவாா்த்தை முயற்சியை நிராகரித்தனா். இதன் விளைவாக, இந்தப் பிரிவினா் 2013, ஏப்ரல் மாதம்முதல் உல்ஃபா(ஐ) எனும் பெயருடன் மியான்மரில் இருந்து தனி அமைப்பாகச் செயல்படத் தொடங்கினா்.

மனைவி, மகனைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்த சுபான்ஷு சுக்லா!

விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ள சுபான்ஷு சுக்லா! தமது மனைவி, மகனை இன்று சந்தித்து உரையாடினார்.கிட்டத்தட்ட மூன்று வார காலம் புவியீா்ப்பு விசை இல்லாத சூழலில் கழித்துவிட்டு, மீண்டும் புவிக்கு... மேலும் பார்க்க

சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் இன்று(ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டத... மேலும் பார்க்க

இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

இராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களு... மேலும் பார்க்க

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, சீனா, பிரேசியல் ஆகிய நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பார்க்க