அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
`மீண்டும் வருவேன்' பார்சல் கொண்டுவந்த கூரியர்பாய்; தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்
உணவு, தபால், பொருள்கள் என எதாவது ஒரு பொருளை டெலிவரி செய்ய டெலிவரிபாய்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவது இன்று வழக்கமாகிவிட்டது. புனே கொண்ட்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒருவர் கூரியர் டெலிவரி செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டு வந்தார். இதனால் செக்யூரிட்டி கார்டு எந்த கேள்வியும் கேட்காமல் கட்டடதிற்குள் அனுமதித்தனர்.
அந்த நபர் நேரடியாக 22 வயது பெண் வசிக்கும் வீட்டிற்கு சென்று கூரியர் வந்திருப்பதாக தெரிவித்தார். அப்பெண்ணிடம் ஒ.டி.பி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனெ அப்பெண் தனது போனை எடுக்க வீட்டிற்குள் சென்றார். அந்நேரம் கூரியர் கொண்டு வந்திருந்த நபர் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்குள் சென்று அப்பெண்ணின் முகத்தில் எதையோ ஸ்ப்ரே செய்துவிட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அவர் அடித்த ஸ்ப்ரேயால் அப்பெண் மயக்கமாகிவிடார். பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அப்பெண்ணின் மொபைல் போனில் அப்பெண்ணுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்ட கூரியர் பாய் அதில், 'மீண்டும் வருவேன்' என்று எழுதி வைத்துவிட்டு சென்றார். வெளியில் சென்று இருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது அவர் மயங்கி கிடந்தார். உடனே அவரை மயக்கம் தெளியவைத்து விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து துணை கமிஷனர் ராஜ்குமார் கூறுகையில், ''இரவு 7.30 மணிக்கு கூரியர் பாய் வந்துள்ளார். அவருக்கு ஒ.டி.பி கொடுக்க போனை எடுக்க பெண் வீட்டிற்குள் சென்றபோது கூரியர் பாய் வீட்டு கதவை பூட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போனில் ஒரு செல்பி இருந்தது. அப்பெண்ணின் முகத்தில் எதையோ ஸ்ப்ரே செய்துள்ளார். இதனால் அப்பெண் மயக்கத்தில் இருந்தார்''என்றார். கூரியர் பாயின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.