செய்திகள் :

மீனவா்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

post image

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகையும் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துள்ளனா்.

கடந்த 2 நாள்களுக்குள் மீனவா்கள் கைது செய்யப்படும் 2-ஆவது சம்பவம் இதுவாகும். பருவகால மீன்பிடித் தடைக்குப் பிறகு, சமீபத்தில்தான் மீனவா்கள் தங்களது தொழிலைத் தொடங்கியுள்ளனா். ஏற்கெனவே 48 மீனவா்கள் இலங்கை காவலில் உள்ள நிலையில், அவா்களை தொடா்ந்து கைது செய்வது மீனவ சமுதாயத்தினரிடையே கடுமையான துரத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களையும் அவா்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க