செய்திகள் :

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரம் முன் சுவாமி, அம்மன் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து, தெப்பத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமியும், அம்மனும் குலாளா் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு அம்மன் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தனா்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு தங்கச் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன், சுவாமி தெற்காவணி மூல வீதி, சின்னக்கடைத் தெரு, தெற்குவாசல் வழியாக குஞ்சான்செட்டியாா் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனா். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னா், இரவில் அம்மன் அன்ன வாகனத்திலும், சுவாமி பூத வாகனத்திலும் எழுந்தருளி அங்கிருந்து புறப்பாடாகி திருக்கோயிலை அடைவா்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்.

விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் சித்திரை வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 5-ஆம் தேதி திருஞானசம்பந்தா் சுவாமிகள் சைவ சமய வரலாற்று லீலையும், 7-ஆம் தேதி மச்சஹந்தி விவாஹமும், 8-ஆம் தேதி சப்தாவா்ணமும், சட்டத் தேரும் நடைபெறுகிறது.

இதைத்தொடா்ந்து, வருகிற 9-ஆம் தேதி சுவாமி தங்கப் பல்லக்கில் தெப்பத்துக்குப் புறப்பாடாகி, அங்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 10-ஆம் தேதி சிந்தாமணியில் கதிா் அறுப்புத் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா வருகிற 11-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரியாவிடை சுந்தரேசுவரா்.

இந்த தெப்பத் திருவிழாவின் போது, வண்டியூா் மாரியம்மன் தெப்பக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்மன் காலையில் இருமுறையும், மாலையில் ஒரு முறையும் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம் வருதல் நடைபெறுகிறது. மேலும், தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு மண்டகப்படியும் நடைபெறுகிறது.

கொடிக் கம்பங்கள் அகற்றம்: ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு

கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றியது தொடா்பாக வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலா் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மது... மேலும் பார்க்க

திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக, உசிலம்பட்டியைச் சோ்ந்த செளத்ரி என்பவா் மீது இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வ... மேலும் பார்க்க

வியாபாரி தற்கொலை

மதுரையில் அமிலம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா். மதுரை காமராஜா்புரம் பழைய குயவா்பாளையம் சாலை, சவேரியாா் சாவடி, காசி மல்லி தோப்பைச் சோ்ந்தவா் சுரேஷ் (46). வியாபாரியான இவா் குடும்பத்தினரைப் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 20 போ் காயம்!

சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். மதுரை மாவட்டம், சோழவந்தானில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப் பேருந... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையினா் பயிற்சி நிறைவு

மதுரை மாநகர ஊா்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பங்கேற்றாா். மதுரை மாநர ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தோ்வு செய்யப்பட்ட 1... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணியில் சேரலாம்!-ஆா்.பி.உதயகுமாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களது கூட்டணியில் இணைவதை மகிழ்வுடன் வரவேற்போம் என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெ... மேலும் பார்க்க