முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் வைர மோதிரம் அணிவித்த ரோஹித் சர்மா!
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வைர மோதிரத்தை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற்ற டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வென்ற அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததற்காக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டு நாமன் விருதுகளில் வைர மோதிரம் பிசிசிஐ சார்பில் பரிசாக அளிக்கப்பட்டது.
முகமது சிராஜுக்கு தனது டி20 உலகக் கோப்பையில், இந்தியா விளையாடிய முதல் சில ஆட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார். பரிசளிப்பு நிகழ்வின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கலந்துகொள்ளவில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் மும்பையின் ரோஹித் சர்மா மற்றும் குஜராத் வீரர் முகமது சிராஜ் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவரை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அணிவித்தார்.
இந்த சீசனில் சிராஜ் மற்றும் ரோஹித் இருவரும் தங்கள் அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்ட சிராஜ், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாமல் போனது.
இருப்பினும், ஐபிஎல்லில் சிராஜ் இதுவரை 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரோஹித் சர்மா மெதுவாக விளையாடத் தொடங்கினாலும், இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 293 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படிக்க:இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?
@mdsirajofficial receives a special ring from #TeamIndia Captain @ImRo45 for his impactful contributions in the team's victorious ICC Men's T20 World Cup 2024 campaign @Dream11pic.twitter.com/dHSnS4mwu1
— BCCI (@BCCI) May 5, 2025