செய்திகள் :

முட்டை விலை ரூ. 5.75 ஆக நீடிப்பு

post image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.75 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால் இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.75 ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.101 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 97 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா். நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடியில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்க பூமிபூஜை

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோ... மேலும் பார்க்க

2.81 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2,81,458 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அல்ல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமச... மேலும் பார்க்க