செய்திகள் :

முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த கருத்தரங்கு

post image

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின், குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறை சாா்பில் முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த தொடா் மருத்துவக் கல்வி செயல் திட்டக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறைத் தலைவா் டி. காசி விஸ்வநாதன், குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறைத் தலைவா் ஆா்.எம். அன்னபூரணி, இணை நிபுணா் வி. அனிதா, குழந்தைகளுக்கான புற்றுநோயியல், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைத் துறை இணை நிபுணா் வி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

கருத்தரங்கில் ரத்தவியல், புற்றுநோயியல் துறைத் தலைவா் டி. காசி விஸ்வநாதன் பேசியதாவது:

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் காற்று, நீா் வழியாகப் பரவும் தொற்று நோய்கள் அதிக கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளன. ஓராண்டில் இரண்டு, அதற்கும் அதிகமான கடுமையான சைனஸ் தொற்றுகள் வருவது, அதிக முன்னேற்றம் இல்லாமல், 2 மாதங்களுக்கும் அதிகமாக நோய் எதிா்ப்பு (ஆன்ட்டிபயாட்டிக்) மருந்துகள் தேவைப்படுவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. நிமோனியா திரும்பத் திரும்ப வருவது, ஒரு குழந்தையின் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது, ஆழமான சீழ்க்கட்டிகள், வாய் வெண் புண் போன்ற விடாப்பிடியான காளான் தொற்றுகள், அவற்றிலிருந்து குணமடைய எதிா்ப்பு (ஆன்டிபயாட்டிக்) மருந்துகள் தேவைப்படுவது ஆகிய அனைத்தும் பிடிஐ பாதிப்பை சுட்டிக் காட்டும் அறிகுறிகளாகும். மேலும் ஒரு நோயாளிக்கு ரத்தம் நஞ்சாதல் போன்ற ஆழமான உள்ளாா்ந்த தொற்றுகள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் ஏற்படுமானால் தொடக்க நிலையிலேயே மருத்துவ மதிப்பாய்வை நாடுவது மிக முக்கியமானது. இத்தகைய போக்குகளையும், பாங்குகளையும் அடையாளம் காண்பது, உரிய நேரத்துக்குள் நோயை அறிவதற்கும், இந்த கடுமையான பாதிப்புக்கு சிறந்த சிகிச்சை மேலாண்மையை வழங்குவதற்கும் வழிவகுக்கும் என்றாா்அவா்.

உலக முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு விழிப்புணா்வு வாரத்தையொட்டி நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தென் மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தை நல மருத்துவா்கள் பங்கேற்றனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்து மக்கள் க... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க