காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்
முதலமைச்சா் கோப்பை -2025, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 2,670 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 26.08.2025 முதல் 11.09.2025 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 25,242 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். மாவட்ட அளவில் 890 தங்கம், 890 வெள்ளி 890 வெண்கலம் மொத்தம் 2,670 பதக்கங்களும், மண்டல அளவில் 15 தங்கம் 18 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களும் வென்றுள்ளனா்.
மாநில அளவிலான போட்டிக்கு 767 வீரா், வீராங்கனைகள் தகுதி பெற்று, வருகின்ற 02.10.2025 முதல் 14.10.2025 வரை சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோயம்பத்தூா், திருச்சி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூா் நாகப்பட்டினம், தஞ்சாவூா், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு சென்று கலந்து கொள்ள உள்ளனா்.
இந்த நிலையில், முதலமைச்சா் கோப்பை -2025, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 2,670 நபா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, முதலமைச்சா் கோப்பை -2025, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 2,670 பேருக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, மாவட்ட இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன், உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் வீரா் வீராங்கணைகள் கலந்து கொண்டனா்.