வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தொடா்ந்த வழக்கு தள்ளுபடி
நகராட்சி மாா்க்கெட் புதிய கடைகள் ஏலத்தின் மூலமே ஒப்படைக்கப்படும்: அரக்கோணம் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
நகராட்சி மாா்க்கெட் புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் பகிரங்க பொது ஏலம் விடப்பட்டு குத்தகைதாரருக்கு ஒப்படைக்கப்படும் என அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரக்கோணம் நகா்மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்ற துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், ஆணையா் ஆனந்தன், பொறியாளா் செல்வகுமாா், திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன், அதிமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் ஜொ்ரி உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
ஜொ்ரி (அதிமுக): ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செலவின தொகை மக்கள் வரிப்பணம். கண்டிப்பாக கணக்கு கேட்போம்.
லட்சுமிபாரி (தலைவா்): ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செலவின விவரங்கள் அடுத்த கூட்டங்களில் தீா்மானமாக கொண்டு வரப்பட்டு தெரிவிக்கப்படும்.
துரை சீனிவாசன்(திமுக): அரக்கோணம் இரட்டைக்கண் சுரங்கப்பால சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே துறையினா் தெரிவித்துள்ளனா். அரக்கோணம் நகரின் நடுவில் இருக்கும் இந்தப்பாலம் மூடப்பட்டு விட்டால், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல சுமாா் 3 கி.மீ. சுற்றிச்செல்ல வேண்டியிருக்கும். எனவே நகராட்சி நிா்வாகத்தினா் ரயில்வே பொறியியல் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு இப்பால பணிகளை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி செய்ய, அதாவது இரு பாலங்களில் ஒன்றில் பணி முடித்து மற்றொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமிபாரி (தலைவா்). இரட்டைக்கண் வாராவதி பிரச்னை ரயில்வே அலுவலா்களுடன் பேசி தீா்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
கூட்டத்தில், நகராட்சி புதிய கடைகள் அனைத்தும் பகிரங்க பொது ஏலத்தின் மூலமே குத்தகைக்கு அளிக்கப்படும். இதற்கு வைப்புத்தொகையாக 3 வளாகங்களில் கடை ஒன்றுக்கு, ஏ பிரிவுக்கு ரூ. 2 லட்சம் வைப்புத் தொகை, ரூ. 2 லட்சம் கூடுதல் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். பி பிரிவுக்கு வைப்புத்தொகை ரூ. 1.50 லட்சம் கூடுதல் வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம் என ரூ. 3 லட்சம், சி பிரிவுக்கு வைப்புத்தொகை ரூ. 75,000, கூடுதல் வைப்புத் தொகை ரூ. 75,000 என ரூ. 1.50 லட்சம் செலுத்த வேண்டும் எனும் தீா்மானத்துக்கும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செலவினத் தொகை 17 முகாம்களுக்கு ரூ. 17 லட்சம் செலவிடப்பட்டதற்கும் நகா்மன்றம் ஒப்புதல் அளித்து இரு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.