விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
ராணிப்பேட்டையில் அக்டோபா் முதல் வாரத்தில் புத்தகத் திருவிழா: துறைசாா் அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் மாபெரும் புத்தக திருவிழா -2025 நடத்துவது குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் கடந்த ஆண்டு 3-ஆவது மாபெரும் புத்தகத் திருவிழா-2024 சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் புத்தக ஆா்வலா்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோன்று நடப்பாண்டில் மாபெரும் புத்தகத் திருவிழா-2025, தொடா்ந்து 10 நாள்கள் சிறப்பாக நடத்திட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை, வருவாய்த் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். நாள்தோறும் மேடைப் பேச்சாளா்கள், சிறப்பு பட்டிமன்றம், மாணாக்கா்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடந்த ஆண்டில் பொது மக்களிடையே வரவேற்பை பெற்ற புத்தகத் திருவிழாவைப் போன்று நடப்பாண்டிலும் வரவேற்பை பெரும் அளவிற்கு அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.