சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு! ஐடி, வங்கித் துறை வீழ்ச்சி!
முதலீட்டில் செயல் நுண்ணறிவு: இளம் தலைமுறையினர் அபாரம்!
பங்குச்சந்தை முதலீட்டில் பெரும்பாலான இளம்தலைமுறையினர், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பங்குச்சந்தை குறித்த ஆர்வம் இளம்தலைமுறையினரிடையே தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களும் முதலீடு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இருப்பினும், அவர்கள் பொருளாதார வல்லுநர்களோ ஆசிரியர்களோ அல்லாமல், பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவின் உதவியையே நாடுகின்றனர் என்று உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வில் கூறியுள்ளது.
நிதிசார்ந்த முடிவுகள், செயல்திறன், குறைந்த செலவுகள் முதலானவற்றால், மனித வல்லுநர்களைவிட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
ஜென் இசட் (Gen Z), மில்லினியல் என்றழைக்கப்படும் (1980 முதல் 2010) தற்போதைய இளம்தலைமுறையினரில் 86 சதவிகிதத்தினர் முதலீடு துறையில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களில் 41 சதவிகிதத்தினர் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி, முதலீடு செய்ய விரும்புகின்றனர். அந்த 86 சதவிகிதத்திலும் 47 சதவிகிதத்தினர் மட்டுமே தொடர்ந்து நாட்டம் கொண்டிருக்கின்றனர்.
முதலீட்டில் ஜென் எக்ஸ் (1965 முதல் 1980) தலைமுறையினர் 9 சதவிகிதம் மட்டுமே நாட்டம் கொண்டிருந்த நிலையில், 30 சதவிகித ஜென் இசட் தலைமுறையினர் தங்கள் ஆரம்ப வயதிலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
இதையும் படிக்க:பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!