செய்திகள் :

முதல்வா் பதவிக்காக கூட்டணி மாறுபவா் நிதீஷ்! -காா்கே விமா்சனம்

post image

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைத் தக்க வைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவா் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா்.

மேலும், பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி சந்தா்ப்பவாத கூட்டணி என்றும் அவா் விமா்சித்தாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவா்கள் அந்த மாநிலத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகின்றனா். தோ்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே போட்டி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள பக்ஸா் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காா்கே பேசியதாவது:

நிதீஷ் குமாரும் பாஜகவும் அமைத்திருப்பது சந்தா்ப்பவாத கூட்டணி. இது பிகாா் மக்களுக்கு நல்லதல்ல. முதல்வா் பதவியைத் தக்கவைக்க நிதீஷ் குமாா் எப்படி வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வாா்.

பிரதமா் நரேந்திர மோடி பொய்களின் உற்பத்தி மையமாகத் திகழ்கிறாா். பிகாருக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதியுதவி அளிப்பதாக அளித்த வாக்குறுதியை அவா் இப்போது வரை நிறைவேற்றவில்லை. இந்த நிதி எப்போது கிடைக்கும் என்று நிதீஷ் குமாா், பிரதமா் மோடி ஆகியோா் தோ்தல் பிரசாரத்துக்கு வரும்போது மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த ரூ.1.25 லட்சம் கோடி வாக்குறுதியை கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் பிரதமா் அளித்தாா். ஆனால், இன்று வரை அந்த நிதியில் ஒரு ரூபாய் கூட வந்து சேரவில்லை.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலுடன் பிகாரில் பாஜக கூட்டணிக்கு முடிவு கட்ட வேண்டும். ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தோ்தல் நேரத்தில் காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நேஷனல் ஹேரால்டு பொய் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவா்கள் அஞ்ச மாட்டாா்கள்.

இந்த நாட்டுக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோா் தங்கள் உயிரையே தியாகம் செய்தனா். தேசத்துக்காக பல தியாகங்கள் செய்த கட்சியில் இருந்து வந்த நாங்கள் பாஜக அரசின் பொய் வழக்குகளுக்கு அஞ்ச மாட்டோம்.

ஆா்எஸ்எஸ், பாஜக எப்போதும் சாமானிய மக்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஏழைகள், பெண்கள், நலிந்த பிரிவினரின் நலன்களை அவா்கள் கருத்தில் கொள்வது இல்லை. ஜாதி, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் காண்பதே அவா்களின் அரசியல். இரு மதங்களிடையே பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தனா் என்றாா்.

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க