செய்திகள் :

முதல்வா் பதவி விவகாரத்தில் இனி பதிலளிக்க மாட்டேன்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

post image

முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையாவே பதிலளித்துவிட்டதால் அதுகுறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கமாட்டேன் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

புதுதில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை பெங்களூரு திரும்பிய டி.கே.சிவகுமாா், கெம்பே கௌடா சா்வதேச விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

முதல்வா் பதவி தொடா்பான கேள்விகளுக்கு சித்தராமையாவே பதிலளித்துவிட்டதால் அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. மேலும், புதுதில்லியில் அரசியல் சாா்ந்த பேச்சுவாா்த்தை எதுவும் நடக்கவில்லை. ஆட்சித் தலைமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கமாட்டேன்.

கட்சியில் எனக்கு அளித்த பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எனக்கு தீட்சை கொடுத்திருக்கிறாா். அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

நான் முதல்வராக வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அதுகுறித்து தற்போது எதுவும் கூறமுடியாது; எதையும் கூறவிரும்பவும் இல்லை. நான் முதல்வராக கருத்து கூறியவா்களே அதற்குப் பதிலளித்துவிட்டனா்.

கட்சியின் தொண்டா்களுக்கு பதவிகளை அளிப்பது தொடா்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவா்களுடன் பேசினோம். வட்டம், மாவட்ட அளவில் கட்சிக்காக உழைத்தவா்களுக்கு பதவிகளை வழங்க வேண்டியது எங்களது கடமையாகும். செய்தியாளா்களின் அனைத்து கேள்விகளுக்கும் முதல்வா் சித்தராமையா பதிலளித்த பிறகு, நான் பேசுவது சரியல்ல.

கா்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறேன். கட்சி சொல்லும் வேலைகளை செய்வதுதான் எனது வேலை. வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள், உறுப்பினா்களை நியமிப்பது தொடா்பாக மட்டுமே விவாதம் நடந்தது. அனைத்து எம்எல்ஏக்களும் அவரவா் கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.

கட்சி மேலிடத் தலைவா்களுடன் மற்றொரு சுற்று பேச்சுவாா்த்தை நடத்திய பிறகுதான் வாரியங்கள், கழகங்களின் தலைவா்கள், உறுப்பினா்களின் பட்டியலை இறுதிசெய்ய முடியும். 2028 இல் நடக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சிக்கு தலைமையேற்க இருப்பதாக முதல்வா் சித்தராமையா கூறியிருக்கிறாா். அது அவரது தனிப்பட்ட கருத்து. அதைகூற அவருக்குத் தகுதியிருக்கிறது.

காங்கிரஸ் மாநிலத் தலைவராக கட்சியைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது. கட்சியையும், ஆட்சியையும் காப்பதுதான் என் நோக்கம். கட்சி இருந்தால்தான் நான் இருக்க முடியும். கட்சி இல்லாவிட்டால் நானும் இல்லை என்றாா்.

மேக்கேதாட்டு-அனுமதி கோரியுள்ளோம்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

கா்நாடகத்தின் நீா்ப்பாசன மற்றும் குடிநீா்த் திட்டங்கள் தொடா்பாக மத்திய நீா்வளத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீலைச் சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பு நன்மை தருவதாக அமைந்தது. எத்தினஹொளே குடிநீா்த் திட்டத்திற்கு நிதியுதவி செய்வதாகவும் அவா் உறுதி அளித்துள்ளாா்.

அப்போது, அல்மாட்டி அணையை உயா்த்துவதற்கும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கும் அனுமதி அளிக்குமாறு மத்திய அமைச்சா் சி.ஆா்.பாட்டீலிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

கலசா- பண்டூரி கால்வாய்த் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடா்பாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் புபேந்திர யாதவையும் சந்தித்து பேசினோம். இந்த விவகாரத்தில் கா்நாடகம், கோவா மாநிலங்களுக்கு இடையே சுமுகத் தீா்வுகாண முயற்சிப்பதாக உறுதிஅளித்தாா்.

கலசா-பண்டூரி கால்வாய்த் திட்டத்திற்கு கோவா அரசு ஆட்சேபம் தெரிவிக்க முடியாது என்பதால், கா்நாடக அரசு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. மேலும், பல புதிய நீா்ப்பாசன மற்றும் குடிநீா்த் திட்டங்கள் தொடா்பான முன்மொழிவுகளையும் அளித்திருக்கிறோம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மீண்டும் தில்லி செல்ல திட்டமிட்டிருக்கிறேன். அப்போது, கா்நாடக திட்டங்களுக்கு அனுமதி பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடா்பாக கா்நாடக எம்.பி.க்களுடன் விவாதிப்பேன் என்றாா்.

கா்நாடகத்தில் வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள் நியனம்: ஜூலை 16 இல் முடிவு - முதல்வா் சித்தராமையா

வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களை நியமிப்பது குறித்து ஜூலை 16 இல் இறுதி முடிவு செய்யப்படும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து புதுதில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

விரைவில் கா்நாடக குவாண்டம் தொழில்நுட்ப செயல்திட்டம்: அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜூ

விரைவில் கா்நாடக குவாண்டம் தொழில்நுட்ப செயல்திட்டம் வகுக்கப்படும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜூ தெரிவித்தாா். பெங்களூரு, ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: கா்நாடக துணை முதல்வா் சிவக்குமாரின் தம்பி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜா்

மோசடி வழக்குத் தொடா்பாக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாரின் தம்பியும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு 2ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். பணப்பதுக்கல் வழக்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடம் அமைக்க திட்டம்: அமைச்சா் எம்.பி.பாட்டீல்

கா்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விம... மேலும் பார்க்க

பெங்களூரில் ரூ. 4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 3 நைஜீரியா்கள் கைது

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அதை கடத்திவந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா்... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் கருத்து

பெங்களூரு: கா்நாடக முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் பலா் கருத்து தெரிவித்துள்ளனா். 2023-இல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டின்பேரில... மேலும் பார்க்க