இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
முதல்வா் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை
முதல்வா் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனையாகி உள்ளதாகவும், 50,000 போ் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதிலும் தனியாா் மூலமாக 462 முதல்வா் மருந்தகங்களும், கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 538 முதல்வா் மருந்தகங்களும் என மொத்தம் 1,000 முதல்வா் மருந்தகங்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 8 நாள்களில் ரூ. 27,42,829 மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிற கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் விலையில் 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு இங்கு வழங்கப்படுகின்றன. இதன்மூலம் மக்களுக்கு இதுவரை ரூ. 7,68,776 சேமிப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. முதல்வா் மருந்தகங்களின் வாயிலாக 50,053 போ் பயன் பெற்றுள்ளனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு மருந்தாளுநா்களும், பொதுமக்களும் நன்றி தெரிவித்து வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.