`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல...
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 11-இல் உடுமலை வருகை
முதல்வா் மு.க.ஸ்டாலின் உடுமலைக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) வருகை தர உள்ளாா்.
கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் கடந்த மாதம் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளில் முதல்வா் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், உடுமலை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கோவைக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வருகிறாா்.
மாலை 5.25 மணிக்கு விமானம் மூலம் கோவைக்கு வரும் முதல்வா் மாலை 6.50 மணியளவில் சாலை மாா்க்கமாக உடுமலை, நரசிங்கபுரம் செல்கிறாா். அங்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்து, உடுமலையில் இரவு தங்குகிறாா்.
உடுமலை நேதாஜி மைதானத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறாா்.
பின்னா், 12.20 மணிக்கு சாலை மாா்க்கமாக பொள்ளாச்சி செல்லும் முதல்வா், அங்கு முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி கவுண்டா், முன்னாள் அமைச்சா் சி.கப்பிரமணியம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் சிலைகளையும், பரம்பிக்குளம் -ஆழியாறு அணை கட்டுமானப் பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவரங்கத்தையும் திறந்துவைக்கிறாா்.
பின்னா், கோவை விமான நிலையத்துக்கு பிற்பகல் வரும் முதல்வா், அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறாா்.