மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்!
தன்னால் முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சிறப்பானதாக அமையவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 76 ரன்களை அவர் வாரி வழங்கினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 2.3 ஓவர்களில் 33 ரன்களை வழங்கினார். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆர்ச்சர் விக்கெட் கைப்பற்றத் தவறினார்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?
இருப்பினும், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசியது குறித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக ஐபிஎல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: சிறப்பாக பந்துவீசி நான் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தால், அடுத்து பந்துவீசுபவரும் நன்றாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். பந்தில் அதிகம் ஸ்விங் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பந்தில் அந்த அளவுக்கு ஸ்விங் இல்லை. ஆனால், முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் கிடைத்தது அணிக்கு உத்வேகமளித்தது என்றார்.