சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
முதியவரிடம் வழிபறி முயற்சி: இருவா் கைது
இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவரிடம் வழிபறி செய்ய முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், ஈசநத்தம் புதூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (70). இவா், தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த மல்லப்புரம் தாசல்நாயக்கனூா் சூலபுரம் சாலையில் திங்கள்கிழமை சென்றாா்.
அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், கிருஷ்ணனிடமிருந்து பணத்தை பறிக்க முயன்றனா். ஆனாலும் கிருஷ்ணன், இறுகப் பிடித்துக் கொண்டதால் பணப் பை தப்பியது.
இதைப் பாாா்த்த அக்கம்பக்கத்தினா், வழிபறியில் ஈடுபட முயன்ற இருவரில் ஒருவரைப் பிடித்து குஜிலியம்பாறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், கூம்பூா் எஸ்.புதூரைச் சோ்ந்த மூா்த்தி என்பதும், உடன் வந்த உல்லியக்கோட்டையைச் சோ்ந்த சரவணன் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூா்த்தி, சரவணன் ஆகியோரைக் கைது செய்தனா்.