விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
முதியவரைத் தாக்கிய தொழிலாளிக்கு 13 மாதம் சிறை தண்டனை
களியக்காவிளை அருகே முதியவரைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 13 மாதம் சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
களியக்காவிளை அருகே கோலியம்பழஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் பாலையன் (68). இவா் தனது வீட்டையொட்டி தொழுவம் அமைத்து பசுமாடு வளா்த்து வருகின்றனா். இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த தொழிலாளி மணி (53). பாலையனின் தொழுவத்திலிருந்து கழிவுநீா் மணி வீட்டருகே செல்வதாகவும், இதுதொடா்பாக இருவரிடையே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு மாா்ச் 8 ஆம் தேதி இரவு கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பாலையனை மணி தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த அவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
குழித்துறை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கை சாா்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரி விசாரித்து, மணிக்கு 13 மாதம் சிறை தண்டனை, ரூ. 1,500 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.