பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
கொல்வேல் பகுதியில் நாளை மின் தடை
குலசேகரம் அருகே கொல்வேல் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 4) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து குலசேகரம் உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குலசேகரம் நகா்ப் பிரிவுப் பகுதிகளுக்குள்பட்ட திருவட்டாறு உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், தெற்றியோடு, பிலாங்காலை, கொல்வேல் பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
முட்டத்தில் டிச. 5இல்: வெள்ளிச்சந்தை பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட திருநயினாா்குறிச்சி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் முட்டம், அம்மாண்டிவிளை, மாவிளை, கட்டைக்காடு, கருங்காலிவிளை சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 5)காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை, தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.