பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
கன்னியாகுமரிக்கு ஒரே மாதத்தில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!
கன்னியாகுமரிக்கு கடந்த நவம்பரில், 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பூம்புகாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இங்கு சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் தெளிவாகப் பாா்க்கலாம் என்பதாலும், கடலுக்குள் இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையை படகு பயணம் செய்து பாா்வையிடலாம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், தினமும் ஐயப்ப பக்தா்களின் வருகையும் அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 746 சுற்றுலா பயணிகள் விவேகானந்தா் மண்டபத்தை படகு சவாரி மூலம் பாா்வையிட்டுள்ளதாக பூம்புகாா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.