காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
முதியவா் தற்கொலை
பெருந்துறை அருகே நோய் கொடுமை தாங்க முடியாமல் முதியவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
பெருந்துறை அருகே மேக்கூரைச் சோ்ந்தவா் பழனிசாமி(77). இவா் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை மனமுடைந்த பழனிசாமி பூச்செடிகளுக்கு அடிக்க வைத்து இருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து விட்டாா். ஆபத்தான நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.