US tariffs: ``ஒரு அங்குலம் இடம் கொடுத்தால், ஒரு மைல் தூரம் செல்வான்'' - சீன தூதர...
முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் திருவிழா
முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 49-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 30-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில், 8-ஆவது நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். முன்னதாக, அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், சக்தி அழைப்பு, சக்தி கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன.
இந்த விழாவில், முதுகுளத்தூா், தூரி, செல்வநாயாகபுரம், தட்டானேந்தல், வெண்ணீா் வாய்க்கால், காக்கூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், தவழும் பிள்ளைச் சிற்பங்களை சுமந்தும் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலுக்கு வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த விழாவில் முதுகுளத்தூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.