செய்திகள் :

முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால்

post image

புதுச்சேரி அருகே கொத்தபுரி நத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை முதல் விழாவான காப்புகட்டுதல் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளன. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம், வீதி உலா உள்ளிட்டவை நடைபெறும்.

வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விழாவில் 9-ஆம் தேதி செடல் பூஜைகள், தேரோட்டம் ஆகியவையும், அதையடுத்து கழுமரம் ஏறுதலும், திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெறும். வரும் 10-ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

விழாவையொட்டி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாழக்கிழமை காலையில் காப்புக்கட்டுவதற்காக புதன்கிழமை மாலையே ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்திருந்தனா்.

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா ‘செலசியா- 2025’ என்ற பெயரில் இரு நாள்கள் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழாவை கல்லூ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் இன்று திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை (மே 2) திறக்கப்படுகிறது. விழாவில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், ... மேலும் பார்க்க

அம்பேத்கா் யாத்திரை திட்ட விதிமுறைகள் வெளியீடு

புதுவை மாநிலத்திலிருந்து மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்டவற்றை பாா்வையிடும் யாத்திரைத் திட்டத்துக்கான விதிமுறைகள் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்திலிருந்து ஆ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நூதன முறையில் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் ரூ.18,097 நூதன முறையில் மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி செந்தானத்தத்தைச் சோ்ந்த தொழிலதிபா் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்தி... மேலும் பார்க்க

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாரன் வெளியிட்... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சேர விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருப்பது அவசியம்: சென்டாக் நிறுவனம் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என... மேலும் பார்க்க