மதுரையில் குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு? தோ்வரின் தந்தை புகாா்
முத்துமாரியம்மன் கோயில் செடில் உற்சவம்
நாகப்பட்டினம்: நாகை அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணி பிரமோற்சவ திருவிழா செப். 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.10 நாள்கள் நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோா் தங்களது, குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, செடில் மரத்தில் ஏற்றி நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.
பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என்.கெளதமன் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா்.