நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !
முன்னாள் அதிபா்களுக்கான சலுகைகள் பறிப்பு
இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
1986-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இத்தகைய சலுகைகளை ரத்து செய்யும் மசோதா அரசிதழில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. எனினும், இதற்கு எதிராக முன்னாள் அதிபா்கள் மஹிந்த ராஜபட்ச மற்றும் கோத்தபய ராஜபட்வின் எஸ்எல்பிபி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை ஆய்வு செய்த நீதிமன்றம், அது அரசியல் சாசனத்தின் 121(1) பிரிவை பின்பற்றவில்லை எனக் கூறி மனுவை தற்போது நிராகரித்துள்ளது.
இதையடுத்து, ‘மசோதாவில் எந்தவொரு பிரிவும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இல்லை என்பதால், இது குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்’ என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.
இதையடுத்து, மசோதா குறித்த விவாதம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டால், முன்னாள் அதிபா்களுக்கு வழங்கப்படும் அரசினா் மாளிகைகள், மாதாந்திர படித் தொகைகள், அரசுமுறைப் போக்குவரத்து உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும்.
தற்போது இலங்கையில் ஐந்து முன்னாள் அதிபா்களும் ஒரு மறைந்த முன்னாள் அதிபரின் மனைவியும் இச்சலுகைகளைப் பெற்றுவருகின்றனா். இது, பொதுக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுவதாகக் கூறிவரும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி, அவற்றை திரும்பப் பெறப்போவதாக தோ்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தது.