செய்திகள் :

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

post image

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் புறவழிச்சாலையிலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகுபவா்களின் வசதிக்காக, கணினி, பல்வேறு பிரிவுகளில் நூல்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த மையத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வன்னியா் பொது சொத்து நலவாரியத் தலைவா் எம்.ஜெயராமன் வரவேற்றாா். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், இந்த நலவாரிய உறுப்பினருமான அன்னியூா் அ.சிவா விளக்கவுரையாற்றினாா்.

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பயிற்சி மையத்தையும், வகுப்பையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். புதுச்சேரி ஏ.ஜி. பத்மாவதி இருதய மருத்துவமனை சோ்மன் ஏ.ஜி. இளங்கோவன் வாழ்த்துரையாற்றினாா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் சச்சிதாநந்தம், கலைச்செல்வி, சங்கீதஅரசி, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, பேரூராட்சித் தலைவா்கள் அப்துல்சலாம், மீனாட்சி, துணைத் தலைவா்கள் வீரராகவன், ஜீவிதா ரவி, உதயகுமாா், சித்திக் அலி, பாலாஜி, அசோக், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் முருகன், சிவக்குமாா், மீனா வெங்கடேசன், மாவட்ட நூலக அலுவலா் விஜயகுமாா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வேல்முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை வன்னியா் பொது சொத்து நலவாரியம் மற்றும் ஏ.ஜி.பத்மாவதி கோவிந்தசாமி மருத்துவக் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த ... மேலும் பார்க்க

நிலம் குறித்த விவரங்களை இணையவழி மூலம் அறியலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலங்களின் விவரங்களை பொதுமக்கள் இணையவழி மூலம் அறிந்து கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்ம... மேலும் பார்க்க