செய்திகள் :

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானம்!

post image

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகன் என்றும் அழைக்கப்பட்ட ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று காலமானார்.

இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு அரசு சார்பில் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, பான் அட்டை, பயண விவரக் குறிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றிய உரைகள் உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்களை அவரது குடும்பத்தினர் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு தானமாக வழங்கினர்.

இதுகுறித்து, அவரது உறவினரான ஏ.பி.ஜே.எம். நஸீமா மரைக்காயர், ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம் மற்றும் தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநர் அருண் சிங்கால் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ரூ.1 லட்சம்! அரசு அதிரடி அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், ‘வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது என்பது வாக்காளா்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிா்வதன் அடி... மேலும் பார்க்க

ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சாா்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீ... மேலும் பார்க்க