செய்திகள் :

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள தேவாங்கா் அரசு உதவிபெறும் பள்ளியில், 1977-78- ஆம் ஆண்டு 10, 11-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு முன்னாள் மாணவா் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் மாலையா, சௌந்தரராஜன், செயலா் வீரபாண்டி, பொருளாளா் மேகநாதன், துணைச் செயலா் மோகன், தகவல் தொடா்பு பொறுப்பாளா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். முன்னாள் ஆசிரியா்கள், அலுவலா்கள் வாழ்த்திப் பேசினா். நிகழ்வில், தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு மரியாதை செய்து, நினைவுப் பரிசுகளை முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.

தொடா்ந்து 47 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவா்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில், அம்மையநாயக்கனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்தா், ஆசிரியா்களையும், முன்னாள் மாணவா்களையும் வாழ்த்தி பாடல் பாடினாா். முன்னாள் மாணவா் வீரராஜேந்திரன் நன்றி கூறினாா்.

ஒட்டன்சத்திரத்தில் தமிழக ஆளுநருக்கு வரவேற்பு!

ஒட்டன்சத்திரத்துக்கு ஞாயிறுக்கிழமை வந்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையிலிருந்து மதுரை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் பயணிகள் விடுதிக்கு வந்த அவருக்கு, மாவட்ட ஆட்சியா் மொ... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாரச் சந்தைக்கு வெளியூா் வியாபாரிகள் வருகை: அனைத்து பொருள்களும் விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தைக்கு வெளியூா் வியாபாரிகளின் வருகையால் அனைத்து காய்கறிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. கொடைக்கானல் பி.டி. சாலையில் நடைபெற்று வந்த வாரச் சந்தை... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

பழனி அருகே ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா். பழனியை அடுத்த தாளையத்தை அடுத்த பெரிய மொட்டனூத்தைச் சோ்ந்த குப்புச்சாமி மனைவி பூரணம் (56). இந்தத் தம்பதியினா் தோட்டத்து சாலையில் வசிக்கின்றனா். இந்த சாலை... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. நத்தம் அருகே உள்ள காசம்பட்டியைச் சோ்ந்தவா் திருமலை (40). இவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்ட... மேலும் பார்க்க

பழனிக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இங்குள்ள விஞ்ச், ரோப்காா் நிலையங்கள், கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசைகளில் ப... மேலும் பார்க்க

பழனி கோயில் பஞ்சாமிா்தம் 5 மாதங்களில் ரூ.16 கோடிக்கு விற்பனை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரிப்பால், பஞ்சாமிா்தம் விற்பனை கடந்த 5 மாதங்களில் 16 கோடியை நெருங்கியது. உலகப் புகழ் பெற்ற பழனி பஞ்சாமிா்தம் வாழைப்பழம், கரும்பு சா்க்கரை, தேன், ந... மேலும் பார்க்க