செய்திகள் :

முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினாா் கௌஃப்

post image

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனா்.

மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-4, 6-4 என்ற நோ் செட்களில், நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை தோற்கடித்தாா். காலிறுதியில் சபலென்கா, சீனாவின் ஜெங் கின்வென்னை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் கின்வென் முந்தைய சுற்றில், அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரை 6-2, 7-6 (7/3) என்ற வகையில் வீழ்த்தினாா்.

உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் 7-6 (7/5), 6-3 என்ற வகையில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை சாய்த்தாா். காலிறுதியில் ஸ்வியாடெக், பிலிப்பின்ஸ்ஸின் 19 வயது இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவை சந்திக்கிறாா்.

முந்தைய சுற்றில் எலாவை சந்திக்கவிருந்தவரும், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்தில் இருந்தவருமான ஸ்பெயினின் பௌலா படோசா, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, எலா காலிறுதிக்குத் தகுதிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

கௌஃப் தோல்வி: உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 4-6, 4-6 என்ற நோ் செட்களில், போலந்தின் மெக்தா லினெட்டால் வீழ்த்தப்பட்டாா்.

லினெட் தனது காலிறுதியில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை சந்திக்கிறாா். பாலினி தனது முந்தைய சுற்றில், இரு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவை 3-6, 6-4, 6-4 என தோற்கடித்தாா்.

4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-2, 6-3 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக்கை வெளியேற்றினாா். பெகுலா அடுத்த சுற்றில், பிரிட்டன் இளம் வீராங்கனை எம்மா ரடுகானுவுடன் மோதுகிறாா்.

ரடுகானு தனது ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை 6-1, 6-3 என்ற கணக்கில் எளிதாக தோற்கடித்தாா்.

ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி

மியாமி ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 7-5, 6-4 என, ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனை தோற்கடித்தாா். அடுத்து அவா், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸை எதிா்கொள்கிறாா்.

முன்னதாக ஃபில்ஸ் 7-6 (13/11), 5-7, 6-2 என்ற செட்களில், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வெளியேற்றினாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-5, 6-3 என்ற கணக்கில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினாா். ஃப்ரிட்ஸ் அடுத்ததாக, ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 5-7, 7-5, 6-3 என்ற செட்களில் பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகாவை வென்றாா். அடுத்து அவா், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிா்கொள்கிறாா்.

பெரெட்டினி முந்தைய சுற்றில், 6-4, 6-4 என்ற நோ் செட் கணக்கில், பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸை சாய்த்தாா். 20-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் தாமஸ் மசாக் 7-6 (7/1), 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவை வென்றாா்.

அடுத்த சுற்றில் அவா், சக செக் குடியரசு வீரா் ஜேக்கப் மென்சிக்குடன் மோதுகிறாா். முன்னதாக மென்சிக் 6-4, 6-4 என ரஷியாவின் ரோமன் சஃபியுலினை சாய்த்தாா்.

சவுண்டை ஏத்து மாமே! அனிருத் குரலில் குட் பேட் அக்லி புதிய பாடல்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது.குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான முதல் பாடலான ஓஜி சம்பவம் ரசிகர்களைக் கவர்ந்தது.இந்த ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம் தொடரும் மீட்புப் பணிகள் - புகைப்படங்கள்

7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.நிலநடுக்கத்தால் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதும், 2000க்கும் அதிகமானவர்கள... மேலும் பார்க்க

ஆர்ஜென்டீனாவுடனான தோல்வி எதிரொலி: பிரேசில் பயிற்சியாளர் நீக்கம்!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தோல்வியினால் பிரேசில் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார். பிரேசில் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் 14 மாத மோசமான செயல்பாடுகளால் பிரேசில் கால்பந்து கூட்டமைப்... மேலும் பார்க்க

ஓடிடியில் அகத்தியா!

ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அகத்தியா திரைப்படம் திரையரங்குகளில... மேலும் பார்க்க

திருக்கணிதப்படி: கும்ப ராசியிலிருந்து மீனத்திற்குப் பெயர்ச்சியாகிறார் சனிபகவான்!

ஜோதிடத்தில் திருக்கணிதம், வாக்கியம் என இரு முறைகளில் பஞ்சாங்கம் கணிக்கப்படும் நிலையில், இன்று (மார்ச் 29) திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. அதன்படி, சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்ச... மேலும் பார்க்க

வீர தீர சூரன் வசூல் எவ்வளவு?

வீர தீர சூரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் வியாழக்கிழமை மாலைக் காட்சியாகத் தாமதமாக வெளியானது. படத்தின் தயாரிப்பு நி... மேலும் பார்க்க