செய்திகள் :

மும்பைக்குச் சென்ற தக் லைஃப் படக்குழுவினர்!

post image

தக் லைஃப் படத்தின் படக்குழுவினர் புரமோஷனுக்காக மும்பைக்குச் சென்றுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் முதல் நாள் வணிகம் பெரியளவிலேயே நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

படத்தின் புரமோஷன் பணிகளை ஏற்கனவே திட்டமிட்டு அதற்கேற்ப படக்குழு தீவிரமாக தொடங்கியுள்ளது.

நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் இணையத்தில் வெளியாகி வைரலானது.

சுகர் பேபி எனும் 2-ஆவது பாடல் நாளை (மே.21) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், மும்பையில் டிரைலர் வெளியிட்டு நிகழ்வுக்கு படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இந்திய போல்வால்ட் அணி பயிற்சியாளராக இளம்பரிதி

தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போல்வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) போட்டிக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக சேலம் பயிற்சியாளர் இளம்பரிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் கொரி... மேலும் பார்க்க

உலக ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: அட்ரியன் கா்மாகருக்கு வெள்ளி

ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அட்ரியன் கா்மாகா் செவ்வாய்க்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

உலக டேபிள் டென்னிஸ்: யஷஸ்வினி/தியா இணை முன்னேற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் யஷஸ்வினி கோா்படே/தியா சித்தலே கூட்டணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. மகளிா் இரட்டையா் 2-ஆவது சுற்றில்... மேலும் பார்க்க

தரவரிசை: அல்கராஸ், பாலினி முன்னேற்றம்

டென்னிஸ் உலகத் தரவரிசையில், இத்தாலியன் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் முன்னேற்றம் கண்டனா். 1000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி அண்மை... மேலும் பார்க்க

தக் லைஃப் பாடலில் சுகர் பேபி சர்ச்சையா? நாளை வெளியாகிறது!

தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் கமல் கதாபாத்திரங்களுக்கு இடையேயான சுகர் பேபி உறவு பேசுபொருளாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அப... மேலும் பார்க்க