சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!
மும்பை: மன்னத் பங்களாவைக் காலி செய்த ஷாருக்கான்; கவலையில் உள்ளூர் வியாபாரிகள்; காரணம் என்ன?
மன்னத் பங்களா
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்திராவில் உள்ள தனது மன்னத் பங்களாவிலிருந்து சமீபத்தில் காலி செய்துவிட்டு அருகில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மாடிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
ஷாருக்கானின் பங்களா இப்போது கூடுதலாக இரண்டு மாடிகளுடன் புதுப்பித்துக் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
ஷாருக்கான் மன்னத் பங்களாவில் வசித்தபோது அவரது வீட்டைப் பார்க்கவும், அவரைப் பார்க்கவும் தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வருவதுண்டு.
அதோடு ஷாருக்கான் வீடு கடற்கரை அருகில் இருப்பதால் ஷாருக்கான் வீட்டைப் பார்த்துவிட்டு அப்படியே கடற்கரைக்கும் சென்று வரலாம் என்று நினைத்து பலரும் ஷாருக்கான் வீட்டைப் பார்க்க வருவதுண்டு.
ஆனால் இப்போது ஷாருக்கான் மன்னத் பங்களாவில் இல்லை என்பதால் மன்னத் பங்களாவைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

உள்ளூர் வியாபாரிகள் கவலை
இதனால் உள்ளூர் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஷாருக்கான் வீட்டிற்கு வெளியில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்யும் ஷியாம் என்பவர் இது குறித்து கூறுகையில், ''ஷாருக்கான் இல்லாததால் இங்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
எங்களது வியாபாரமும் வெகுவாக குறைந்துவிட்டது. ஷாருக்கான் இல்லையென்றால் மன்னத் இல்லை'' என்றார்.
மற்றொரு வியாபாரி இது குறித்து கூறுகையில், ''ஷாருக்கான் இங்கு இருந்தால் வரும் சுற்றுலாப் பயணிகள் அவரைப் பார்க்கலாம் என்று காத்திருப்பார்கள். ஆனால் இப்போது ஷாருக்கான் இல்லாததால் வருபவர்கள் நிற்பது கிடையாது.
ஷாருக்கான் இருந்தால்தான் மன்னத்திற்கு மரியாதை. இப்போது எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
ஷாருக்கான் மன்னத் பங்களாவில் வசிக்கும் போது எப்போதாவது வீட்டை விட்டு வெளியில் வந்தால் பார்க்கலாம் என்று எண்ணி அதிகமானோர் வீட்டிற்கு வெளியில் காத்துக்கிடப்பது வழக்கமாகும்.
ஷாருக்கான் வீடு புதுப்பித்து முடிக்க இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...