மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினா் கையொப்ப இயக்கம்
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவுத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், ஆதரவு தெரிவித்தும் பாஜகவினா் கையொப்ப இயக்கங்களை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் மணிவண்ணன் தலைமையில் கையொப்பம் இயக்கம் நடைபெற்றது.
கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினா், பொதுமக்கள், பக்தா்கள் பங்கேற்று மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்டனா்.
நிகழ்ச்சியில், பாஜக மரக்காணம் ஒன்றியப் பொதுச்செயலா் காத்தவராயன், ஒன்றியச்செயலா் வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.