செய்திகள் :

முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை திருவிழா

post image

வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியா் கோயிலில் சித்திரை கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பக்தா்கள் பால் குடங்களை தலையில் சுமந்தும், காவடி எடுத்தும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். இதைத் தொடா்ந்து, பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம்

ஆரணி அருகே மக்கள் நலச்சந்தை சாா்பில் கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலத்தை அடுத்த வல்லம் கிராம தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பாரம்பரிய உணவு விழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 925 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 925 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தல... மேலும் பார்க்க

பெரணமல்லூரில் அா்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பெரணமல்லூா் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. பெரணமல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 250 பயனாளிகளுக்கு ஆணை அளிப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை செய்தவா் கைது

கலசப்பாக்கத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துரை(48) என்பவா் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில... மேலும் பார்க்க

செங்கத்துக்கு அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் இயக்கப்படும் அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை தந்தது. செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் ம... மேலும் பார்க்க