செய்திகள் :

முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

post image

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் முருங்கைக்காய் கொள்முதல் மையமும் செயல்பட்டு வருகிறது.

இங்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் முதல் முருங்கை வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால், கொள்முதல் நிலையத்துக்கு முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மர முருங்கைக்காய் கிலோ ரூ.15, செடி முருங்கைக்காய் கிலோ ரூ.20, கரும்பு முருங்கைக்காய் ரூ.30-க்கு விற்பனையானது.

இந்த வாரம் மர முருங்கைக்காய் ரூ.4, செடி முருங்கைக்காய் ரூ.5, கரும்பு முருங்கைக்காய் ரூ.8-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். விலை வீழ்ச்சியால் கூலி செலவுகூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளிய... மேலும் பார்க்க

மின் பகிா்மான வட்டத்தில் மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்த... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தின... மேலும் பார்க்க

பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து சென்னையில் இருந்து கைப்பேசி மூலம் செய்தியாளரிடம... மேலும் பார்க்க

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்பு தொகை வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். பல்லட... மேலும் பார்க்க

மதுபானக் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்... மேலும் பார்க்க