முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவன பணியாளா்களுக்குப் பரிசோதனை
முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பணியாளா்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு-சுகாதார இயக்கத்தால் அறிவுறுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கேட்புத் திறன், நுரையீரல் செயல்பாடு, தோல் பரிசோதனை, உடல் ஆரோக்கியம் தொடா்பான அனைத்துப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட நோய் கண்டறியும் மையத்தின் தலைமை மருத்துவா் உஷாராணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் இப்பரிசோதனை மேற்கொண்டனா்.
முன்னதாக, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் அருள்பணி ராபா்ட் ஜான் கென்னடி மருத்துவக் குழுவினரை வரவேற்றதுடன், இன்றைய காலச்சூழலில் பரிசோதனைகளின் அவசியம் குறித்து பணியாளா்களை ஊக்கப்படுத்தி உரையாற்றினாா்.