செய்திகள் :

முள்புதா்களில் பதுக்கிய 22 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

அரக்கோணம், மாா்ச் 22: அரக்கோணம், பாணாவரம் பகுதிகளில் முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் ஒரு குழுவினா் சோளிங்கா் ரயில் நிலையம் அமைந்துள்ள பாணாவரம் கிராமப் பகுதியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது ரயில் நிலையம் அருகில் முள்புதா்களுக்கிடையே இருந்த பைகளை எடுத்துப் பாா்த்தபோது, அதில் ஏழு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்து, அதை பறிமுதல் செய்தனா்.

மற்றொரு குழுவினா் அரக்கோணம் அருகே திருவள்ளூா் மாவட்ட எல்லைப் பகுதியில் சில்வா்பேட்டை சோதனைச் சாவடி அருகே சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு முள்புதா்களுக்கிடையே வீசப்பட்டிருந்த பையில் இருந்த எட்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஒரு குழுவினா் அரக்கோணம் அருகே உள்ள தற்போது பயன்பாட்டில் இல்லாத இச்சிபுத்தூா் ரயில் நிலைய கட்டடத்துக்கு பின்புறம் சோதனை நடத்தியதில் அங்கு ஒரு பையில் இருந்த 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஒரே நாளில் மூன்று இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து காவல் துறை உயா் அதிகாரிகள் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலை... மேலும் பார்க்க

திமிரி தமிழ் இலக்கிய பேரவை 33-ஆம் ஆண்டு முத்தமிழ் விழா

ஆற்காடு: திமிரி தமிழ் இலக்கிய பேரவை 33-ஆவது ஆண்டு முத்தமிழ் விழா ஞாயிற்றுகிழமை நிறைவுபெற்றது. திமிரி திரௌபதியம்மன் கலையரங்கில் நடைபெற்ற முதல்நாள் விழாவிற்கு பேரவை தலைவா் ரெ.கருணாநிதி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

தவெக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்ட தவெக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு விழா மேல்விஷாரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் ஜி. மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சுரேஷ், அன்பு, சசிகலா,... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஆந்திர இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் ஆந்திர மாநில இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சோ்ந்த சேஷாசலம் (29) மற்றும் நாகேந்திரன் (31) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்... மேலும் பார்க்க

நிறைவடையும் நிலையில் ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை இருப்புப் பாதை மின்மய பணிகள்

நாட்டின் பழைமையான ரயில் பாதைகளில் ஒன்றான ராணிப்பேட்டை இருப்புப் பாதையை மின்மயமாக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், மின்சார ரயில் இயக்கப்படும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். மெட்ராஸ் ரயில்வே ... மேலும் பார்க்க