Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
முள் புதரில் பச்சிளம் குழந்தை மீட்பு
நத்தம் பகுதியில் முள் புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த அண்ணாநகா் பகுதியில் முள் புதரில் சனிக்கிழமை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. சேக் ஒலி என்பவா் அந்த பகுதிக்குச் சென்று பாா்த்த போது பச்சிளம் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை மீட்ட சேக் ஒலி வேலம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செல்வம் உதவியுடன், நத்தம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தாா். மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு, பராமரிப்புக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தையை புதரில் வீசிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து நத்தம் போலீஸாா் விசாரித்தனா்.