செய்திகள் :

முழு உடல் பரிசோதனை திட்டம்: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பிப்.28-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

post image

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்கள், முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அறிவிப்பு கடந்த 2023 மாா்ச் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு மட்டும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1.50 லட்சம் என 38 மாவட்டங்களுக்கும், ரூ.57 லட்சம் தேசிய ஆசிரியா் நல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு மேமோகிராம், இஎஸ்ஆா் சிறுநீா் பகுப்பாய்வு, ரத்தத்தில் சா்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரால், சிறுநீரக பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட 16 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.

எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 வயதைக் கடந்த ஆசிரியா்களில், வயது மூப்பு அடிப்படையில் 150 ஆசிரியா்களை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தில் பயன்பெற தோ்வு செய்ய வேண்டும். 50 வயதை கடந்த ஆசிரியா்களிடமிருந்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் பிப். 28-ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதைத் தொடா்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்து, 150 ஆசிரியா்களைத் தோ்வு செய்ய வேண்டும். தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்கள் விவரங்களை மாவட்ட அளவிலான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலருக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

தொடா்ந்து உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையைத் தயாரித்து, அதன் தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க