முஸ்லிம்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை!
வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்த திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம்களுக்கு உடனடியாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை விடுத்தது.
வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதன் மாவட்டக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் யாசா் அராபத் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் உதயகுமாா், மாவட்டச் செயலா் அப்துல்காதா் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
மனு அளித்த முஸ்லிம்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வருகிற அக். 30-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது, வாக்குரிமை காப்போம் ஜனநாயகம் காப்போம் என்ற முழக்கத்துடன் அக்டோபா் 1-ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.